இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த நடக்கை என்பது தேவனுடைய பரிசுத்தத்தையும் நீதியையும் பிரதிபலிப்பதாகும்,இது இக்காலகட்டத்தில் ஜீவிக்கும் சகோதர சகோதரிகளால் மறக்கப்பட்ட ஒரு குணநலனாகும். நாம் இயேசுவோடு இணைந்து இருக்க விரும்பும் வரை கிருபை மிக எளிதாக கிடைக்கும் காலக்கட்டத்தில் எல்லாம் இலகுவாக நடக்கும்போது, ​​​​பேதுருவின் வார்த்தைகள் நம்மை பயத்துடனும் பக்தியுடனும் திகைப்படையச்செய்கின்றன - தேவனுடைய சித்தத்தை செய்ய மற்றும் அவரது தன்மையை பிரதிபலிக்க நமது சரீரங்களையும் , இருதயங்களையும், மனதையும் ஒப்புக்கொடுத்து , நம்மையும், நம் உலகத்தையும் கறைப்படுத்தும் சாத்தானின் பாவத்திலிருந்து நம் வாழ்க்கையை விலக்கி வைப்பததே பரிசுத்த அர்ப்பணிப்பாகும் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமான பிதாவே, உம் கிருபையை மற்றவர்களுக்கு வழங்கும்போது, ​​உம்முடைய சித்தத்தைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் . என் இருதயத்தின் அசைவுகளும், என் மனதின் எண்ணங்களும், என் வாழ்க்கையின் செயல்களும் உமக்கு மகிழ்ச்சியாகவும், உமது பரிசுத்தத்தையும் கிருபையையும் பிரதிபலிக்கட்டும். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து