இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்துவம் பலவீனமானவர்களுக்கோ அல்லது கடினமான ஒன்றை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதவர்களுக்கானதோ அல்ல. எங்களுக்கு உதாரணம் இப்படிப்பட்ட வார்த்தைகளால் விவரிக்கப்பட்டுள்ளது... தம்மைத்தாமே வெறுமையாக்கினார்"..... "அடிமையின் ரூபமெடுத்தார்" ..."தன்னைத் தாழ்த்திக் கொண்டார் " ..."கீழ்ப்படிந்தார் " ..."சிலுவையில் மரித்தார் !"...அது கடினமான விஷயம்.அதுவே எங்களின் உதாரணம்.இயேசுவின் கதை ஒரு இனிமையான குழந்தையுடன் தொடங்கலாம், ஆனால் ஒரு முன்னனையில் அவர் வைக்கப்படுவதிலிருந்தும் தொடங்குகிறது. அது சக்திவாய்ந்ததாகவும் விலையேறப்பற்றதாகவும் இருந்தாலும், இது அருவருப்பான மற்றும் போலியான உணர்வு அல்ல. இது மீட்பதற்கு செலுத்தப்பட்ட விலை மற்றும் அவர்களின் மீட்பரை அவர்கள் அறிந்திருப்பதால் வேறுபட்ட நபர்களைப் பற்றியது.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , அன்புள்ள பிதாவே, நான் வாழும் நிஜ உலகில் சுவிஷேச வரலாற்றை வைத்ததற்கு நன்றி. இயேசுவே,நீர் என் உலகத்திற்கு வந்து அதன் கடினமான காரியங்களை எதிர்கொண்ட இரட்சகராக இருப்பதற்கு நன்றி. நான் தியாகம், கீழ்ப்படிதல் மற்றும் தாழ்மையுடன் இருக்க கற்றுக் கொள்ள எனக்கு உதவுங்கள். அதனால் உமது கிருபையை பெற மற்றவர்களுக்கு உதவ நான் பயன்படுவேன்.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து