இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய இருதயத்தை நமக்குக் காண்பிக்கவும் , மற்றும் பகைஞர்களிடமிருந்து நம்மை மீட்கும்படியாகவும் இயேசுவானவர் வந்தார். ஆனால் இன்று, உலகின் பகைமையுள்ள பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் குறைவாக இருக்கும் இடங்களிலும், கிறிஸ்தவர்கள் அனுதினமும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். தேவன் இயேசுவை அனுப்பியது பாவத்திலிருந்தும் அதன் வல்லமையிலிருந்தும் நம்மை முற்றிலுமாய், முதலாவது மீட்பதுமல்லாமல், சாத்தானின் தினசரி தாக்குதல்களிலிருந்தும், நமது விரோதமான கலாச்சாரங்களிலிருந்தும், நமது மாம்ச இச்சைகளுடனான நமது போரிலிருந்தும் நம்மை விடுவிக்கவும் அனுப்பினார். சர்வாதிகாரம், வறுமை, வன்முறை, துஷ்பிரயோகம், ஏளனம் போன்றவற்றின் பிடியிலிருந்தும் தம்முடைய பிள்ளைகளை விடுவிப்பதற்காக நம் அன்பான தேவன் இன்று நாம் வாழ்கிற இவ்வுலகில் வல்லமையுடன் கிரியை செய்ய ஜெபிப்போம். தேவன் தமது பிள்ளைகளை காப்பாற்றி மீட்டுக்கொள்வதை நாம் அங்கீகரிக்கவும், நம்முடைய விடுதலைக்காக அவரை துதித்து ஜெபிப்போம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே , தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உம் அன்புக் பிள்ளைகளை தயவு செய்து பெலப்படுத்துங்கள். உமது வல்லமையின் வெளிப்பாட்டின் மூலம் அவர்களுக்கு நீர் விடுவித்ததை தெரியப்படுத்துங்கள். நீர் எங்கள் மீட்பர் மற்றும் இரட்சகர். உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம்: உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும். நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து