இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நியாயப்பிரமாணத்தினாலே அதை செய்ய முடியவில்லை. பலிகளாலும், பக்தியாலும், மத சடங்களினாலும் கூட அதைச் செய்ய முடியவில்லை.இயேசுவால் மட்டுமே முழு பாவ மன்னிப்பும் தர முடியும். இயேசுவால் மட்டுமே நம்மை முழுமையாக நீதிமான்களாகவும் பரிசுத்தமாகவும் ஆக்க முடியும். மன்னிப்பும், நீதியும் அவர் மூலமாக வரும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த மற்றும் நீதியுள்ள பிதாவே, சர்வவல்லமையுள்ள தேவனே , உம்முடைய குமாரனே என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து என்று ஒப்புக்கொள்கிறேன். இயேசுவே என் ஆண்டவராக இருப்பதற்கும் என் பாவங்களுக்கு விலையாக கொடுத்ததற்கும் நன்றி. ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்வில் இயேசுவின் குணத்தையும் இரக்கத்தையும் மேலும் உருவாக்க எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இயேசுவின் நாமத்திலே நான் இந்த ஆசீர்வாதத்தைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து