இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய ஈவாகிய இயேசுவுக்காக ஒரே ஒரு உகந்த பதில் என்னவென்றால் - நம்முடைய துதியும், ஸ்தோத்திரமும். தேவனின் அன்பு, கிருபை, தயவு, ஆசீர்வாதம், மன்னிப்பு, இரக்கம் மற்றும் இரட்சிப்பு ஆகியவை இயேசுவின் எண்ணி முடியாத ஈவின் மூலமாய் நமக்கு கிடைக்கிறது . நாம் எப்படி அவரைப் போற்றாமல் இருக்க முடியும்? அத்தகைய மகத்துவமுள்ள தேவனுக்கு முன்பாக நம் இருதயங்களையும், நாவையும் எவ்வாறு அமைதியாக வைத்திருக்க முடியும்? இப்பொழுது நம்மாலும் முடியாது, அவர்களாலும் கூடாதே. அவர்களுடைய எதிர்ப்பு, நாம் அநேகரை சந்திக்கும்படியான ஒரு நினைப்பூட்டுதலாய் இருக்கிறது. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , நீர் மகிமையுள்ளவர் . உம் கிருபை அற்புதமானது . உம்முடைய குமாரனாகிய இயேசுவின் ஈவு மிக பெரிதானது . இயேசுவை அனுப்புவதன் மூலம் உமது மகிமையையும் கிருபையையும் எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக உம்மை துதிக்கிறேன் , இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து