இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுதந்திரத்தை விட விரும்பத்தக்க சில விஷயங்கள் உள்ளன. ஜனங்கள் அதற்காக மரிக்கிறார்கள், ஜெபம் செய்கிறார்கள் மற்றும் பாடும்படுகிறார்கள். உண்மையான விடுதலை சத்தியத்தை அறிவதில் இருந்து வருகிறது. சத்தியத்தை அறிவது என்பது இறுதியில் இயேசுவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் வருகிறது. சத்தியம் என்பது நீங்கள் நினைப்பது அல்லது விசுவாசிப்பது மட்டுமல்ல. சத்தியம் என்பது நீங்கள் நடப்பிக்கும் கிரியைகளில் ஒன்று, நீங்கள் ஜீவிக்கிறீர்கள் . இயேசுவின் போதனை பெரும்பாலும் ஆச்சரியத்துடன் முடிவடைகிறது: இவற்றைச் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்! அவருடைய சித்தத்தை கிரியைகளினால் காண்பிப்பதின் மூலமே சத்தியம் நம்மை விடுதலையாக்கும் என்பதை நாம் எப்போதும் அறிந்துகொள்ளுவோம் .

என்னுடைய ஜெபம்

மெய்யான தேவனுக்கே மகிமையும், வல்லமையும், மாட்சிமையும்,புகழ்ச்சியும் ஸ்தோத்திரமும் உண்டாயிருப்பதாக. பிதாவே உம்முடைய சமூகத்தை மாத்திரம் தேடாமல்,அடியேனுடைய தேர்வுகளில் உம்முடைய மனநிறைவு இருக்கும்படி கேட்கிறேன். உமது வார்த்தைக்கும் உமது சித்தத்திற்கும் கீழ்ப்படிந்து இன்று வாழ்வேன் என நான் உறுதியளித்துள்ளதால், தயவுகூர்ந்து உமது சத்தியத்தை எனக்கு மேலும் கற்றுக்கொடுங்கள். ஜீவ வார்த்தையாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து