இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் தம்முடைய நற்குணத்தை நமக்கு மறைத்து வைக்காமல் இருப்பது எத்தனை அற்புதமான காரியம் அல்லவா? தகப்பன் தம் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை வழங்க விரும்புகிறார். இந்த ஈவுகள் அனைத்தையும் உள்ளடக்கியவை. இந்த ஈவுகள் மகிழ்ச்சியுடன் வழங்கப்படுகின்றன. எனக்கு எப்படி தெரியும்? மூன்று வழிகள்: 1.பரலோகத்தின் தேவன் நம்மை மீண்டும் மீண்டும் ஆசீர்வதித்திருக்கிறார். 2.பல நூற்றாண்டுகளாக தம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி தேவனானவர் என்ன என்ன காரியங்களை செய்திருக்கிறார் என்பதை நாம் பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கலாம். 3.தேவனுடைய பரிசுத்த வேதாகமம் இது உண்மை என்று உறுதியளிக்கிறது. தேவன் நம்மிடமிருந்து எதையும் மறைத்து வைக்கவில்லை ! ஆனால் நாம் குற்றமற்றவர்களாக இருப்போமானால் என்ன நடக்கும்? நம்மில் யாரும் நாமாகவே குற்றமற்றவர்களாக இருக்க முடியாது , ஆனால் கிறிஸ்துவுக்குள் , நாம் இயேசுவைப் பின்தொடர்ந்தால் தேவன் நம்மை அவருடைய குற்றமற்ற பிள்ளைகளாக பார்க்கிறார். நாம் அப்படி செய்யும் போது, கர்த்தர் கிருபையின் மேல் கிருபையை கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார் (யோவான் 1:16)
என்னுடைய ஜெபம்
பிதாவே , என் வாழ்வில் நீர் பொழிந்த அநேக ஆசீர்வாதங்களுக்கு உமக்கு நன்றி செலுத்துகிறேன் . இன்று என் இருதயத்தில் இருக்கும் அநேக காரியங்களை பட்டியலிட விரும்புகிறேன். (உங்கள் நன்றியுள்ள விஷயங்களின் பட்டியலை உருவாக்கி, நாங்கள் ஜெபிக்கும்போது அவற்றை தேவனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.) எல்லாவற்றிற்கும் மேலாக, பிதாவே , உம்முடைய நேச குமாரன் மற்றும் என் இரட்சகரின் மூலமாய் உம் சமூகத்திலே வந்து உம்மை கிட்டி சேர வழி வகுத்ததற்காக நன்றி, "உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக" உம்முடைய அன்பான ஈவுகளையும் அன்பான வாக்குறுதிகளையும் நான் பெறுவேன் என்பதை அறிந்து, நம்பிக்கையுடன் உம் சமூகத்திற்கு முன்பாக வருகிறேன். நான் உம்மிடம் ஜெபிக்கும்போது அடியேன் மனதிலே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென். * கொலோசெயர் 1:22-23.