இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பு! இந்த அன்பின் வாரத்தில், அன்பின் உண்மையான அர்த்தத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும் . அன்பின் ஊக்குவிப்பு மற்றும் வெளிப்பாடு இல்லாமல், அனைத்து "கிறிஸ்தவ" நடவடிக்கைகளும் கிறிஸ்தவத்தை விட "வெறும் செயல்பாடு "மேலோங்கும் . அன்பு என்பது பிறருக்காகச் செய்யப்படும் நற்கிரியைகளின் மூலம் கிறிஸ்துவின் குணாதிசயத்தையும், இன்னுமாய் அவருடைய சமூகம் நம் வாழ்வில் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவே துயரம் என்ற வழிகளில் எப்பொழுதாவது பயணம் செய்து தொலைந்துபோகாமல் . நம்மில் அநேகர் அனுதின அன்பின் அவசியத்தை, வாழக்கையில் உள்ள உறவுகளில் உண்டாகிற அன்றாடம் தடைகளினால் மறந்துபோகிறோம். வருடம்முழுவதும் அன்பாக இருந்து , நாம் இயேசுவின் சீஷர்களென்று காண்பிப்போம் . (யோவான்13:34-35).

என்னுடைய ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே , இயேசுவில் உம் அன்பை வெளிப்படுத்தியதற்காக மிக்க நன்றி. இயேசுவானவர் தன்னலமற்றவராய் , தியாக மனப்பான்மையுடன், இன்னுமாய் எப்பொழுதும் போலவே அன்புக்கூர்ந்த பிரகாரமாய் அடியேனும் என் கிரியைகள் மூலமாய் உம் அன்பை மற்றவர்கள் அறியும் வகையில் பிரகடனம் செய்ய எனக்கு உதவியருளும் — இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து