இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார். அது எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இவை வார்த்தைகளினால் சொல்வதை விட மிக அதிகமானது. நம்முடைய இலக்கை அடைய முயற்சிக்கும் போது, ஒரு கட்டத்தில் அதை தொடர முடியாத வேளைகளில் நம்முடைய தேவன் அவைகளை தொடர்ந்து செல்ல நமக்கு பெலன் தந்து ஆசீர்வதிக்கிறார். நாம் போராடும் போதும் , ​​இக்கட்டான வேளைகளில் இருக்கும்போதும் , ​​அவருடைய வல்லமை நம்மை கரம்பிடித்து நடத்தி ஜெயம் கொள்ள செய்கிறது. அவருடைய நாமத்திலே நாம் வெற்றிகளைப் பெறும்போது, ​​நாம் கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து உயர பறந்ததெழும்ப முடியும். அவர் ஒரு மேய்ப்பனாகவும், எல்லாமாகவும் நம் வாழ்வில் இருக்கிறார் . அவர் நம் வாழ்வின் கன்மலையும், நம்மை பாதுகாக்கிறவருமாய் இருக்கிறார் !

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள நல்மேய்ப்பரே, இன்றிரவு உமது கிருபையிலும், நீர் என்னோடு இருக்கிறீர் என்ற நம்பிக்கையிலும் எனக்கு இளைப்பாற உதவியருளும் . இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து