இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் பாவங்கள் மன்னிக்கப்படலாம்! இது மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா, ஆனால் இன்னும் சிறப்பான செய்தி உள்ளது. நம் பாவத்தினாலுண்டாகும் எந்த கறையிலிருந்தும் சுத்திகரிக்கப்படலாம் !! அது ஆச்சரியமானது !! தேவனின் கிருபையினாலும், நம்முடைய பாவங்களுக்காக அவருடைய பரிபூரண பலியினாலும் நான் மன்னிக்கப்படுவது மட்டும் அல்லாமல்,. இன்னுமாய் சுத்திகரிக்கப்பட்டு புதியசிருஷ்டியுமாய் ஜெநிபிக்கப்படுகிறேன் !

என்னுடைய ஜெபம்

மன்னிப்பின் பிதாவே , நீர் என்னை கிருபையாய் மன்னித்தது போல நானும் மற்றவர்களை நேசிக்கவும், மன்னிக்கவும் இயலாததினால் இன்று என்னை மன்னித்தருளும் . உமது இருதயத்தைப் போன்ற ஒரு இருதயத்தை என்னுள் உருவாக்கும் : உண்மையுள்ள, மன்னிக்கும் மற்றும் இரக்கமுள்ள குணத்தையுடைய இருதயம். விலையேறப்பெற்ற இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து