இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் பாவஞ்செய்தேன். நம் எல்லோரும் பாவஞ்செய்தோம் என்பதை நினைவில் கொள்வோம். நம் பாவத்தை அளவிட முடியாது. நாம் தேவ மகிமையற்றவர்கள். நாம் நற்பண்பு உடையவர்களாயிருக்கலாம், ஆனால் நற்பண்பு மாத்திரம் நம்மை இரட்சிக்காது.தேவ மகிமையும்,மெய்யான நீதியுமே மரணத்தினின்று நம்மை மீட்டு மகிமைக்கு அழைத்துச் செல்கிறது. நம்முடைய பாவத்திற்காக கிறிஸ்து இயேசுவை விலையாகக் கொடுத்ததற்காகவும் , அவருடைய கிருபையை இலவசமாய் நமக்கு வழங்கியதற்காகவும் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக . நான் " இடித்த வேளைகளில்,"நீர் அதை மறுபடியும் புதுப்பித்து கட்டினீர்!

என்னுடைய ஜெபம்

தயவும், அன்பும் நிறைந்த பிதாவே , நீர் உமது கிருபையில் தயாளராய் இருப்பதற்காக நன்றி. என் பாவத்திலிருந்து என்னை மீட்டுக்கொள்ள உறுதியாய் நீர் இருந்ததைப் போல நானும் உமது நீதியின் மேல் பேரார்வம் கொண்டவனாக இருக்க உதவியருளும் . இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து