இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெலன் ! நாம் பெலனை விரும்புகிறோம். பெலனின் அதிகாரத்தையும் அதின் சீற்றத்தையும் நாம் விரும்புகிறோம். காரியங்களை மாற்றக்கூடிய மகா பெலனை கொண்டு வரும் திறனை நாம் விரும்புகிறோம். ஆனால், இந்த பூமியில் இதுவரை காண்பிக்கப்பட்ட மிகப்பெரிய வல்லமையானது , சர்வவல்லமையுள்ள தேவன் தனது குமாரன் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டபோது அவரது மகா வல்லமையையும், உக்கிரத்தையும் அடக்கியபோது வெளிப்படுத்தப்பட்ட பெலனே . இவைகளை நடப்பித்ததினால் அவர் நம்மை இரட்சிக்கக்கூடும் . இப்போது அது அற்புத வல்லமையின் வெளிப்பாடாகும் , அதுவும் குறிப்பாக நமக்காக மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டது . இன்னுமாய் , சிலுவை ஒரு முடிவல்ல, அது இயேசுவின் புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான உயிர்த்தெழுதலுக்கான வழியாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், மகத்துவமுமுள்ள, உன்னதமான தேவனே, உம்முடைய வல்லமைக்காகவும், பெலனுக்காகவும் உம்மை போற்றுகிறேன். ஆனால் அந்த பெலனை கொண்டு விடுவிக்க வழிகாட்டும் உம்முடைய அன்பிற்காக நான் நன்றி கூறுகிறேன். உம்முடைய பெலமுள்ள ஆவி எனக்குள் இல்லாமல் நான் தூசியாக ( மண்ணாக) இருக்கிறேன் என்பதை அறிந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் . உமது அன்பின் பெலத்தினால் நான் மன்னிக்கப்படுவதற்கு உமது மகா வல்லமையை பிரயோகிக்காமல் என்னைக் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் இரக்கத்தினாலும், அவருடைய பரிசுத்த நாமத்தினாலும் நான் இந்த ஜெபத்தைச் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து