இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உமது ராஜ்யம் வளர்வதாக , உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக." "மாரநாதா ! என்பதற்கு ஆண்டவராகிய இயேசுவே வாரும் !" என்று அர்த்தமாகும். ஆம், அப்பொழுது ஒவ்வொரு முழங்கால்களும் அவருக்கு முன்பாய் முடங்கும் . ஆனால் நம்முடைய முழங்கால்கள் கிறிஸ்துவுக்குள்ளாய் அவருக்கு முன்பாக முன்னமே முடங்கியிருக்கிறது . அனைத்து ஜனங்களும் நம் ராஜாவின் முன்பாக பணிந்து ஸ்தோத்திரிக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டு வாழ்கிறோம். அந்த நாள் வரும் வரை, நம்மால் இயன்றமட்டும் அநேகரை கிறிஸ்துவுக்குள் பயத்தினால் அல்ல மாறாக சந்தோஷத்தினால் அவரை பணிந்து கொள்ளும்படியாய் அவர்களை நாம் வழி நடத்துவோமாக.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னை இரட்சித்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி. இயேசுவின் ஜெயநாளைப் பற்றிய எனது எதிர்பார்ப்பு, உம்முடைய ஒப்புரவாக்குதலின் சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு கூற என்னைத் நெருக்கி ஏவுகிறது , அதினால் மற்ற ஜனங்களும் அந்த நாளுக்கென்று ஆயத்தமாய் இருந்து , அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இன்றைக்கு இயேசுவிடம் வர வேண்டி காத்திருப்பவர்களை காணும்படியாய் என் கண்களைக் திறந்தருளும் . அவர் மூலமாய் அடியேன் ஜெபம் செய்கிறேன் . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து