இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வார்த்தைகள் முதலில் எதைக் குறிக்கின்றன என்பதைத் தாண்டி, வெற்றிசிறந்தவராய் மற்றும் ஜெய கொடியுடன் வெண் குதிரையின் மீது நம்முடைய மீட்பர் கடைசி நாளில் திரும்பி வருவார் என்பதை இன்று நாம் அறிவோம். அல்லேலூயா, என்ன ஒரு பாக்கிய நாள்! நம்முடைய இரட்சகரும் சகோதரரும், நண்பருமான இயேசு கிறிஸ்து எல்லாவற்றுக்கும் ஆண்டவர் என்பதை இந்த உலகம் உண்மையாகவே இன்று அறிந்து கொள்ளும்!

என்னுடைய ஜெபம்

நித்தியமுள்ள தேவனே, கடைசி நாளினில் உம்முடைய நேசகுமாரன் உலகத்தை வெற்றிசிறந்து ஜெய இராஜாவாய் நிற்கிற அந்த நாளை எதிர்நோக்குகிறேன். அந்த நாள் மட்டும், அடியேனுடைய ஊழியத்திலே, வாழ்க்கையிலே குடும்பத்திலே, உம்முடைய இராஜ்ஜியம் பிரதிபலிக்கும்படி ஜெபிக்கிறேன். வெண் குதிரையின் மேல் வருகிறவருடைய நாமத்தினாலே அடியேன் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து