இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் நாவை பொறுமையோடே கையாளுங்கள். உங்கள் காதுகளை கூர்மையோடே திறந்து வையுங்கள். நீங்கள் கோபத்திலிருக்கும் போது,உங்கள் கோபம் தணியும் வரை காத்திருந்து, பின் பதிலளியுங்கள்.உங்கள் வாயை திறவாமல் உங்கள் காதுகளைத் திறந்து வைக்கவும். அவர்கள் அனைவரும் சொல்வது ஒன்றே. இப்போது நாம் அதைச் செய்தால், கிறிஸ்தவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் அல்லவா!

என்னுடைய ஜெபம்

வல்லமையும் பரிசுத்தமுமான தேவனே , நீர் அற்புதமானவர் - என்னுடைய எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டவர் . நானும் உமது மற்ற பிள்ளைகளும் வெளிப்படுத்தும் உந்துதல், அர்த்தமற்ற மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளை நீர் எப்படி சகித்துக்கொண்டீர் என்பது என் புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது. எந்த விதமான புண்படுத்தும் பேச்சிலிருந்தும் என் இருதயத்தை உறுதிப்படுத்தவும், என் உதடுகளைப் பாதுகாக்கவும் பரிசுத்த ஆவியானவரை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என் இருதயம் போலவே என் வார்த்தைகள் உம்முடையதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதையே நான் இயேசுவின் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து