இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தனியாக இருப்பதில்லை . அவருக்காக நம் வாழ்க்கையை வாழவும், இன்னுமாய் நம்மை மறுபடியும் நித்திய வீட்டிலே அவரோடுக்கூட வாழ வைக்கவும் தேவன் நமக்கு ஒருவரையொருவர் தந்தருளி இருக்கிறார் . நம்முடைய வாழ்க்கை பிராயணத்தில் , நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து , சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்பட்டு , அழுகிறவர்களுடனே அழவும் வேண்டும். கிறிஸ்துவத்தில் தனிக் கிறிஸ்தவர் என்று எதுவும் இல்லை, ஒருவருக்காக ஒருவர் வாழ்வதே கிறிஸ்தவமாகும் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , இன்று எவர்களுடைய பாரத்தை சுமந்து , மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அவர்களிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். இன்று உம் பிள்ளைகள் வாழ்கிற இவ்வுலகிலே அடியேனை உம்முடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துபவராய் இருக்க உதவியருளும் . இவைகளை நான் இயேசுவின் நாமத்திலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து