இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உன்னைக் குறித்து நான் அறியேன் , ஆனால் அந்த பழைய காரியங்களை நீக்க நான் தயாராக இருக்கிறேன். கண்ணீர், மரணம், துக்கம், அழுகை மற்றும் உபத்திரவம் அவைகளின் முடிவு எனக்கு மிகவும் நன்மையாய் தோன்றுகிறது ! ஆரம்பகால கிறிஸ்தவர்கள், "மாரநாதா- கர்த்தராகிய இயேசு வாரும் !" என்று சொல்வதில் ஆச்சரியமில்லை. அவர்களால் காத்திருக்க முடியவில்லை.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நான் உமக்கு மெய்யாக ஊழியஞ் செய்ய முயற்சிக்கும்போது தயவுசெய்து எனக்கு உதவியருளும் . பல நூற்றாண்டுகளாக உமது பிள்ளைகள் ஏங்கிக் கொண்டிருக்கும் மகிமையான நாள் வரும் வரை என் அன்பிலும், உமக்காக வாழ்வதிலும் உறுதியாய் இருக்க வேண்டும் என்பதே என் வாஞ்சை . உம்முடைய மகிமையில் உம்மைக் காணவும், உமது சமூகத்தில் பங்கடையவும் , உம் மகிமையான சிங்காசனத்தைச் சுற்றி எல்லா முன்னோர்களுடன் சேர்ந்து உம்மை துதித்து போற்றும்படி நான் ஏங்குகிறேன். இயேசுவின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து