இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா! எந்த ஒரு நகரத்திற்கோ , பட்டணத்திற்கோ அல்லது நாட்டிற்கோ புதிய தலைவர்களை தேர்ந்துதெடுப்பதற்காக அல்லது ஒரு சபையில் மூப்பர்களை , போதகர்களை அல்லது ஊழியர்களை தேர்ந்தெடுப்பதற்காக , கர்த்தரிடத்தில் செய்யும் விண்ணப்பத்தை விட மிக சிறந்த ஜெபம் என்னவாக இருக்க முடியும்: எல்லா மனுகுலத்தின் ஆண்டவரே, தயவுசெய்து எங்களுக்கு முன்னே செல்லக்கூடிய , எங்களை மெய்யாய் பராமரித்து, உம்முடைய சமாதானம் மற்றும் கிருபை நிறைந்த வழியை மாதிரியாக கொண்டு உத்தம இருதயத்தோடே எங்களை வழிநடத்தும் தலைவர்களை ஏற்படுத்தியருளும் . அப்பொழுது நாங்கள் மேய்ப்பன் இல்லாத செம்மறி ஆடுகளைப் போல இருக்க மாட்டோம் . தேவனே , அத்தகைய தலைவர்களை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , தவறான காரணங்களுக்காகத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததற்காகவும், தீய குணம் கொண்ட ஆனால் மற்ற காரியங்களில் வெற்றி பெற்ற நபர்களை, எங்களை வழிநடத்த தேர்ந்தெடுத்ததற்காகவும் எங்களை மன்னியுங்கள். தயவு செய்து கிறிஸ்தவர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் மற்றும் சபைகளின் ஒவ்வொரு நிலையிலும் உத்தம இருதயத்தோடே ஜனங்கள் மீது அதிக அக்கறை கொண்ட தலைவர்களை உருவாக்குங்கள் . இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் இதை ஒருமனதோடே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து