இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் எல்லாவித கிருபையின் தேவன் ! (1 பேதுரு 5:10) அவர் கொடுக்கவும், ஆசீர்வதிக்கவும், அதிகாரமுள்ளவர்களாக்கவும் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். தேவன் நம்மைக்கொண்டு இந்த மூன்று காரியங்களை செய்யும்படியாய் தெரிந்துகொண்டதான ஒரு வழி என்னவென்றால் ;நாம் அவருடைய ஆசிர்வாதத்தின் வழிகளாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறார். தாலந்துகளை பற்றியதான உவமைகளில் குறிப்பிட்ட உண்மையுள்ள ஊழியக்காரனைப் போல நாமும் உதாரகுணத்திலே உண்மையாய் நமக்கு நிர்வகிக்கும்படி கொடுக்கப்பட்ட காரியங்களில் உண்மையுள்ளவனாய் இருந்தோமானால், அவர் நம்மை மற்றவர்களுக்கு உதவுசெய்யும்படிம் அவருக்கு மகிமைகொண்டுவரும்படியும் இன்னும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்கிறவாராய் இருக்கிறார் . நாம் கொடுப்பதினாலும் , பகிர்வதினாலும் , ஆசீர்வதிப்பதினாலும் , தேவன் நாம் நினைக்கிறதற்கும் மேலாய் நமக்கு தொடர்ந்து கொடுக்கிறவராய் இருக்கிறார் ( பார்க்க 2 கொரிந்தியர் 9 : 6 -11 & எபேசியர் 3 : 20, 21).

என்னுடைய ஜெபம்

பிதாவே, என் இருதயத்தை திறந்து இன்னும் அதிகமாய் உதாரகுணமுள்ளவனாகும்படி உதவியருளும். என்னில் நீர் வைத்திருக்கிறதான அநேக ஆசீர்வாதங்களையும், வளங்களையும் பிரயோகித்து மற்றவர்களை ஆசீர்வதித்து உமக்கு மகிமை கொண்டுவர விரும்புகிறேன். தயவு கூர்ந்து அடியேனுக்கு நீர் கொடுத்த ஊழியத்தின் பாதைகளில் தைரியமாயும், உற்சாகமாயும் பயமில்லாமல் துணிவோடு பிரயோகிக்க உதவிச்செய்யும். நான் உம்முடைய கிருபையை பகிர்ந்துகொள்வதாலும், என் இருதயம் சுத்தமாகஇருப்பதாலும் உம்மை ஒருபோதும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பேன் என்பதை நான் அறிவேன். இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றி. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து