இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கையிட்டு செய்யும் காரியங்களிலும், பேசும் வார்த்தைகளிலும் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதை விட இந்த நாளுக்குரிய உயர்ந்த இலக்காக வேறொன்றையும் என்னால் நினைக்க முடியாது. ஆனால் பவுலானவர் ஒரு படி மேலே சென்றார் - நாம் அவருடன் இணைக்கப்பட்டிருப்பதின் மூலமாக நாம் நம்முடைய மகிமையைக் கண்டுக்கொள்ள வேண்டும்! எனவே இன்று நம் ஒவ்வொருவரிலும் இயேசு மகிமைப்படுவார், நாம் இயேசுவோடு பயணிப்பதால் நமது மகிமை வெளியரங்கமாக காணப்படும் !

என்னுடைய ஜெபம்

மகிமையும் மாட்சிமையுமுள்ள பிதாவே , எனது அன்றாடச் செயல்களைத் திட்டமிடவும், பிறகு அந்தச் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் நான் முயலும்போது எனக்கு உதவியருளும் , அதனால் நான் கையிட்டு செய்யும் செயலிலும் , நினைக்கும் காரியங்களிலும், பேசும் வார்த்தைகளிலும் இன்னுமாய் அனைத்திலும் எனது கவனமும் ஆர்வமும் உமக்கு மகிமை சேர்ப்பதில் இருக்கட்டும் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து