இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேதாகமத்தில் உள்ள தேவனுக்கான அனைத்து நாமங்களிலும், இது எனக்கு மிகவும் பிடித்தமானது: "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாய் செய்யக்கூடியவர்." செங்கடலைப் பிரித்தவரும் , பசுமையான மலையின் மேல் 5,000 நபர்களுக்கு ஐந்து அப்பம் இரண்டு மீன்களை கொண்டு போஷித்த அந்த தேவன் தான் நம் தேவனும் கூட . நாம் கேட்பதற்கும் அல்லது நினைத்து பார்ப்பதற்கும் அதிகமாய் நம் வாழ்க்கையில் கிரியை நடப்பிக்க அவர் விரும்புகிறார்! துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலோர் நம்முடைய எதிர்காலத்தை குறித்து குறைவான எண்ணம் கொண்டவர்களாயும் இன்னுமாய் விசுவாச குறைவோடு ஜெபிக்கிறதினால் அவருக்கு நாம் அதிக சவால்களை கொடுப்பதில்லை . தேவனுக்காக பெரிய காரியங்களை செய்யும்படியாய் கனவுகளை காண்போம். அப்படியானால், நாம் கற்பனை செய்வதை விட அதிகமான காரியங்களை பெற்றுக்கொள்ள காத்திருக்கலாம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும் , அற்புதமமுள்ள தேவனே , கடந்த நாட்களில் நீர் நடப்பித்ததை இன்று எங்கள் வாழ்நாட்களில் செய்தருளும் . விசுவாசிப்பதற்கு எங்களுக்கு நம்பிக்கையை தாரும் , பின்னர் நாங்கள் எங்கள் நம்பிக்கையிலே எவ்வளவு குறுகிய பார்வையோடே இருந்தோம் என்பதை உம்முடைய ஆச்சரியமான கிரியையினால் காண்பியுங்கள் . உம்முடைய திட்டத்தைப் பார்க்கும்படி எங்கள் மண கண்களை திறந்தருளும் மற்றும் பெரிய காரியங்களை நடப்பிக்க விரும்புகிறீர் என்பதை அடியேன் விசுவாசிக்கும்படி செய்தருளும் . இந்த காரியங்கள் குறித்து நாங்கள கேட்பது எல்லாம் எங்களுக்காகவோ அல்லது எங்கள் நற்பெயருக்காகவோ அல்ல, மாறாக உம் மகிமைக்காகவும் மற்றும் நாங்கள் வாழும் இவ்வுலகின் இரட்சிப்பிற்காகவும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து