இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக வேளைகளில் , நான் தேவனின் கடந்தகால கிரியைகளை பார்த்து அவருக்கு பயப்படுகிறேன், மேலும் நம் முன்னோர்கள் தங்கள் நாட்களில் தேவனுக்கு விரோதமாக செய்ததினால், இப்பொழுது நம் நாட்களில் அவருடைய வல்லமையின் வெளிப்பாட்டைக் காண மாட்டோம் என்று நினைக்கிறோம். இஸ்ரவேலின் புதிய தலைமுறையினருக்கு அவர் அவர்களின் பெற்றோரை எகிப்திலிருந்து விடுவித்ததாகவும், இப்போது அவர்களுடன் சென்று அவர்களின் பெற்றோரைப் போலவே அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் தேவனானவர் மோசேயின் பிரியாவிடை உரையைப் பயன்படுத்தினார். நமக்குள் செயல்படும் அவருடைய வல்லமையால் நாம் கேட்கக்கூடிய அல்லது நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் அவர் நம் நாளில் அதிகம் செய்வார் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும் (எபேசியர் 3:20-21). விசுவாசமுள்ள நம் முன்னோர்களுக்குக் கடந்த நாட்களில் தேவனானவர் செய்ததைக் கேள்விப்பட்டதை நம் நாளில் செய்வார் என்று விசுவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும் (ஆபகூக் 3:2). மேலும், இயேசுவின் அன்பான விசுவாசிகளே, நம் இரட்சகரின் வாக்குறுதியை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவான் 14:12).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , அளவற்ற வல்லமையோடும், பராக்கிரமத்தோடும் உமது மக்களுக்காக கிரியை செய்பவரே , எங்கள் தலைமுறையில் இரட்சிக்கப்படாதவர்களை இயேசுவிடம் அழைக்க உமது மாபெரும் வல்லமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து எங்களை உம்முடைய கருவிகளாகப் பயன்படுத்தி, முன்னாட்களில் நீர் செய்தது போல , எங்களுடைய நாளிலும் மீட்பு மற்றும் மறுமலர்ச்சிக்கான வலிமையான செயல்களைச் நடப்பியுங்கள் . பிதாவே , உமது ஆற்றலையும், இரட்சிக்க உமது விருப்பத்தையும் நாங்கள் எப்பொழுதும் நம்புகிறோம். உம்முடைய மக்களை விடுவிக்க கடந்த காலத்தில் நீர் ஆற்றலுடனும், கிருபையுடணும் செயல்பட்ட அநேக ஆயிரம் வழிகளை நாங்கள் அறிந்திருக்கிறோம் . தயவு செய்து எங்கள் நாட்களில் வல்லமையோடு செயல்பட்டு, எங்கள் தலைமுறையை மீட்டு, அவர்களை உம்மிடம் திரும்ப அழைத்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து