இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமக்கு தெரிந்தவை மற்றும் நாம் நம்பும் விஷயங்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறை படுத்தவில்லையென்றால், அவை அனைத்தும் முக்கியமாய் தோன்றாது . பரிசுத்தமான, எளிமையான அனுதின வாழ்க்கையில் விசுவாசமில்லாமல் வாழ்ந்தால் அவை விசுவாசமே அல்ல; அது ஒரு வெளிப்புற வேஷமாகும் . அவரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதை கிரியையிலே நடப்பிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னது போல, அவருடைய சகோதரராகிய யாக்கோபும் அதை நமக்கு நினைப்பூட்டுகிறார்: தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை நாம் கற்றுக்கொண்டால், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: அவைகளை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, இன்று உமது சித்தம் மற்றும் உமது சத்தியம் என்று அறிந்துக்கொண்டதை நடைமுறைப்படுத்த எனக்கு உதவுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து