இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கோடிக்கணக்கான நட்சத்திரங்களுள்ள இப்பிரபஞ்சத்தில், அவற்றை உருவாக்கிய தேவனின் வல்லமையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம் , அவற்றின் பெயர்கள் ஒவ்வொன்றும் தெரியும். அவருக்குத் தெரிந்த அனைத்தும் , நமக்குத் தெரியாது என்பதை நினைத்துப் பார்ப்போம். நம் வரலாற்றுப் புத்தகங்களில் இல்லாத அனைத்தையும் அவர் பார்த்திருப்பதை நினைத்துப் பார்ப்போம். அவர் செய்த மற்றும் செய்யக்கூடிய அனைத்தையும் நினைத்துப் பார்ப்போம். மேலும் , நம்முடைய இருதயத்தின் விஷயங்களைப் பற்றி அவரிடம் பேசவும், அவருடைய கிருபையின் மகத்தான விரிவாக்கத்தையும் நம் மனதின் வரையறுக்கப்பட்ட அறிவையும் புரிந்துகொள்ள அவர் நம்மை அழைக்கிறார், .

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , நான் அறியாத பல விஷயங்கள் உள்ளன. என் உலகில் என்னால் தொடர முடியாத பல விஷயங்கள் உள்ளன. உம்மைப் பற்றி நான் தெரிந்து கொள்ள ஏங்குகின்ற பல விஷயங்கள் உள்ளன, ஆனால் என்னால் தொடர்ந்து புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து, அன்பான பிதாவே , உம்முடைய தாக்கத்தை அதிகமாக எனக்குக் கொடுங்கள்: உம்மைப் பற்றி மேலும் அறிய எனக்கு உதவுங்கள், இதனால் நான் தனிப்பட்ட முறையில் உம்மை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். நீர் எனக்கு அப்பாற்பட்டவர், எனவே நீர் உம்மை வெளிப்படுத்தும் போது என்னுடன் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். பரலோகத்தில் உம்மை நேருக்கு நேர் தெரிந்துகொள்ள நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், ஆராய்ந்து அறிய முடியாத மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவன், என் அப்பா பிதாவானவர். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து