இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நிலையற்ற கீர்த்தி , பொய்யான வாக்குத்தத்தங்கள் மற்றும் கோணலான முறைமைகள் கொண்ட உலகத்திலே நாம் வாழ்கிறோம். தேவனுடைய அன்பின் ஆழம் , தேவனுடைய கிருபையின் எண்ணிமுடியாத ஐஸ்வரியம், அளவிடமுடியாத தேவனுடைய ஆசீர்வாதம் , தேவனுடைய மக்களின் நற்பண்புகள், தேவனுடைய இரக்கத்தினால் நமக்கான இரட்சிப்பின் திட்டம் , நாளைய தினத்தைக் குறித்ததான தேவனுடைய வாக்குத்தத்தம்....... ஆகியவற்றைத் தவிர வேறு எதைப் குறித்து நாம் மேன்மைப்பாராட்ட முடியும்? தேவனையும் அவரது நித்திய கிருபையையும் விட வேறு என்ன அர்த்தமுள்ள மேன்மை இருக்கிறது?

என்னுடைய ஜெபம்

மகத்துவமும், இரக்கமுள்ள ஆண்டவரே, என் வாழ்வின் எல்லா நன்மையும், நீடித்து நிலைத்திருக்க கூடியவை எல்லாம் உம்மாலே உண்டாயிருக்கிறது . இந்த வார்த்தைகள் எளிமையானவை என்றாலும், அவைகள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்டானவை . இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன், ஆமென் !

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து