இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சத்தியம் பெரும்பாலும் எளிமையானதைப் போலவே இனிமையுமானது - இயேசுவே நம் ஜீவன் என்றால், நம் வாழ்க்கைக்கு முடிவே இல்லை. மரணம் நம்மிடமிருந்து ஜீவனைப் பறிப்பதில்லை, ஆனால் இயேசுவின் பிரசன்னத்தில் நம்மை நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்கிறது!

என்னுடைய ஜெபம்

நித்திய பிதாவே , உமது அன்பை என்னிடம் விளங்கச்செய்ய இயேசுவை அனுப்பியதற்காக நன்றி மற்றும் என்னை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுபடியுமாய் அவரை விரைவில் அனுப்ப போவதற்கும் நன்றி. இயேசு கிறிஸ்து, என் வாழ்க்கையின் புயல்களில் எனக்கு நங்கூரமாகவும், இருண்ட இரவுகளில் என் வெளிச்சமாகவும் இருக்கிறார், இவை நீர் என்னை மாறாத அன்புடன் நேசிக்கிறீர்கள் என்பதை நினைப்பூட்டுகிறது. உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிற இயேசுவின் நாமத்திலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து