இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்றைய உலகில் மரணம் என்பது சாபத்தின் முடிவு . நாம் அதைப் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை, அதைப் பற்றி பேசுவது மிகவும் குறைவு. எவ்வாறாயினும், மரணம் என்பது நம்மை விட்டு விலகாத ஒரு நிதர்சனமான ஒன்று . நாம் நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் இழக்கிறோம். நம் வாழ்வின் ஒரு கட்டத்தில், இயேசு நம் மறைவுக்கு முன் வராவிட்டால் நாமும் இந்த தவிர்க்க முடியாததை எதிர்கொள்வோம். நாம் தவிர்க்க முடியாததை எதிர்கொள்ளும் போது நமது உத்தரவாதம் என்ன? நம் மேய்ப்பர். அவர் நம்முடைய பயணத்தில் வழிக்காட்டி, நம்மை பாதுகாத்து, ஆறுதல்படுத்தி, நம்முடனே வருகிறார். இது கிறிஸ்தவர்களுக்கான வாக்குறுதி, ஏனென்றால், இயேசுவை நம் நல்ல மேய்ப்பராக நாம் அறிந்திருக்கிறோம். நாம் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் (மரணத்துக்கு )பயப்பட வேண்டியதில்லை ; நம் மேய்ப்பர் மகிமையில் நமக்கு முன் செல்லுகிறார்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , என் மேய்ப்பரும் இரட்சகருமானவரே, நான் தனியாக மரணத்தை சந்திக்க வேண்டியதில்லை என்பதற்காக நன்றி. மரண இருளின் பள்ளத்தாக்கிலே என்னை வழிநடத்தி , உம்முடைய பரிசுத்தத்திற்கும், வெற்றியின் மகிமையுள்ள பிரசன்னத்திற்கும், மகிழ்ச்சிக்கும் என்னை அழைத்துச் செல்ல உம் வழிகாட்டுதலை எதிர்நோக்கி , உம் வார்த்தையை கவனிக்கிறேன். இயேசுவின் நாமத்திலே நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து