இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவுக்குள்ளாக எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார், அவர் மற்றவர்களுடன் ஆத்தும ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்ளுக் கூடிய வல்லமையை எனக்கு போதித்தார் . இன்றைய வசனத்தில் உள்ள சிறிய ஆசீர்வாதத்தை விட சிறந்த ஒன்றை என்னால் யோசிக்க முடியாது! கிருபை , அன்பு மற்றும் ஐக்கியம் - இவை அனைத்தும் நம் தேவனுடைய நித்தியமான , தியாகமான மற்றும் கிருபையான குணாதிசயத்தில் வேரூன்றியுள்ளது . இந்த ஆசீர்வாதங்களை உலகம் முழுவதும் உள்ள தேவனுடைய பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வோம் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , இந்த ஆசீர்வாதத்தின் ஐசுவரியத்தை தேவைப்படும் பல விலையேறப்பெற்ற நண்பர்களைப் பற்றி நான் இப்பொழுது நினைத்துக்கொண்டிருக்கிறேன். தயவுகூர்ந்து அவர்களை பூரணமாகவும், கிருபையுடனும் ஆசீர்வதியும் . இயேசுவின் நாமத்தினாலே நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change