இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேகர் அவர்களுடைய வழியைப் நாம் பின்பற்றவும், அவர்களின் சத்தத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று விரும்புகிறார்கள். தேவன் மட்டுமே தன்னை உண்மையுள்ளவராகவும் அன்பானவராகவும் காலங்காலமாக நிரூபித்துள்ளார். அவருடைய வல்லமையில் அவர் கனப்பட வேண்டும். ஆனால் தேவனுக்கேற்ற பயமானது ஒரு "சபையை சார்ந்த காரியமாக " பார்க்காமல், அது ஒரு "வாழ்க்கையின் காரியமாக " என்னவேண்டுமென்று என்று மோசேயினால் நமக்கு நினைப்பூட்டப்படுகிறது. அவருடைய கட்டளைகளுக்குக் நாம் கீழ்ப்படிந்து அவைகளை கைக்கொள்ளவேண்டும், நாம் அவருக்குச் ஊழியஞ் செய்து , நம் அன்றாட வாழ்வில் அவரை மாத்திரமே சார்ந்திருக்க வேண்டும். சபையில் மௌனமாய் இருப்பதை காட்டிலும் , அவரை கனப்படுத்தி துதித்து அவருக்குரிய மகிமையை, நாம் கிரியையினால் காண்பிக்க வேண்டியதே சிறந்த செயலாகும் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள பிதாவே , நான் துதித்து பாடுவதை போல வாழவும், நான் சொல்வதை நடைமுறைப்படுத்தவும், நான் ஜெபிப்பதைப் பின்பற்றவும் முயற்சிக்கையில், இந்த காரியங்களை அடியேன் சபைக் கூடிவருகிறதான இடத்தில் மாத்திரமல்ல நான் எங்குசென்றாலும் அங்கேயும் உமக்குரிய கனத்தை எனது அன்றாட வாழ்க்கையில் எடுத்துச் செல்ல உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து