இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தீமையிலிருந்து திரும்பினால் மட்டும் போதாது. நம் வாழ்வில் உள்ள தீமையான விஷயங்களையும் நாம் சுத்தம் செய்ய வேண்டும் , ஆனால் நாம் நன்மையான காரியங்களை தீவிரமாகத் தொடர்ந்து செய்யாத பட்சத்தில், மிக மோசமான தீமை அந்த வெற்றிடத்திற்கு விரைந்து வந்து சேரும் (மத்தேயு 12 : 43 - 45 ).நன்மை செய்ய தீவிரமாகவும் "சமாதானம் செய்ய" ஆர்வமுள்ள மக்களாகவும் இருப்போம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, அடியேன் சமாதானத்தின் காரணராக இருக்கவேண்டும். எங்கே பகை உண்டாயிருக்கிறதோ அங்கே உமது அன்பையும், கிருபையையும் பகிர்ந்துகொள்ள அடியேனை உபயோகித்தருளும். எங்கே காயங்களும், பாவங்களும், முறிவுகளும் உண்டாயிருக்கிறதோ அங்கே குணமாக்குதலும், மன்னிப்பும், ஆறுதலும் கொண்டுவரும்படி அடியேனை உபயோகித்தருளும். அப்பா பிதாவே, இவ் உலகத்திலே உம்முடைய நற்கிரியை நடப்பிக்கும்படி அடியேனை உபயோகித்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து