இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த எளிய மற்றும் நேரடியான வாக்கியம் இரண்டு வழிகளைக் கூறுகிறது : முதலாவது , மிக சிறிய ஆசீர்வாதமாக இருந்தாலும் கூட நாம் தேவனின் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் போது நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் . இரண்டாவதாக, இயேசுவின் நாமத்தில் நம்மை ஆசீர்வதிப்பதற்காக எளிய காரியங்களை மற்றவர்கள் நமக்கு செய்யும்போது நாம் மகிழ்ந்துக்களிகூரலாம் , ஏனென்றால் மற்றவர்களின் தயவையும் கிருபையும் நாம் பெறுகிறோம், பின்னர் தேவன் தம்முடைய மகத்தான கிருபையால் அந்த இரக்கத்தை ஆசீர்வதிக்கிறார். அடிப்படையாக, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி வாழ்வோம்! நாம் அப்படி செய்யும் போது தேவன் ​​மகிமைப்படுகிறார் . நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் . நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்கிறோம். மேலும் , மற்றவர்கள் கிருபை பாராட்டும் போது, ​​தேவன் அவர்களையும் ஆசீர்வதிப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். தேவனானவர் தம்முடைய ஆசீர்வாதங்களை நம் அனைவர் மீதும் பொழிகிறார். தேவனின் அதிசயமான பராமரிப்பில் , நாம் எவ்வளவு அதிகமாக ஒருவரையொருவர் ஆசீர்வதிக்கிறோமோ, அவ்வளவு நன்மைகள் அனைவருக்கும் உள்ளன!

என்னுடைய ஜெபம்

கிருபையும் அன்பும் நிறைந்த பிதாவே , என்னைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆசீர்வதிக்க இந்த வாரம் அடியேனை எடுத்து பயன்படுத்தும் . ஆனால் குறிப்பாக இந்த வாரம், அன்பான பிதாவே , தயவுசெய்து உம்முடைய கிருபை மிகவும் தேவைப்படும் ஒருவரின் வாழ்க்கைக்கு என்னை வழிநடத்தி செல்லுங்கள் . நீர் அவர்களை என் பாதையில் கொண்டு வரும்போது அவர்களைப் பார்க்க எனக்கு பகுத்தறியும் ஞானத்தை தாரும். அவர்களை அணுகி ஆசிர்வதிக்க எனக்கு தைரியத்தை தாரும் . அவர்களை என் இருதயத்தில் வைத்து, அவர்களுக்கு அநேக நாட்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி எனக்கு உதவியருளும். இயேசுவின் நாமத்தில், உம் மகிமைக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்த உம்முடைய உதவியையும் கிருபையும் வேண்டுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து