இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"தேவனுடைய நீதி" என்று உங்களை கடைசியாக எப்போது நினைத்தீர்கள்? அது எப்படியிருந்தாலும் அதின் அர்த்தம் என்ன ? சிறந்த மனிதர்களில் காணப்படும் மிக சிறந்த குணாதிசயத்தை நாம் பெற்றுக்கொண்டோம் என்று அர்த்தம்; அப்படிப்பட்டவர் தேவன் மாத்திரமே ! நாம் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும் (ஆதியாகமம் 1:26-27), நாம் முழுமையாக தேவனைப் போல் இல்லை என்பது நமக்குத் தெரியும்! நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் நாம் அறிவோம். தேவன் எல்லா வகையிலும் பூரணமானவர். நம் குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகள் நமக்குத் தெரியும்! தேவனிடம் , எவ்வளவேணும் குறைபாடுகள் இல்லை. அவர் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர். எனவே, நாம் எப்படி "தேவனுடைய நீதியாக" இருக்க முடியும்? தேவனின் பரிபூரணமான மற்றும் பாவமற்ற நீதியுள்ளவர் இயேசு மாத்திரமே ,அவர் நமக்காக நம்முடைய அக்கிரமங்களுக்காக பாவமானார், அதினால் நாம் அவருக்குள்ளாய் நீதிமான்களாக மாறியிருக்கிறோம் . கிருபையை காட்டிலும் , இது நமக்குள் வாசமாயிருக்கும் தேவனுடைய கிருபையின் அற்புதம்! ஒரு அதிசயம் என்னவென்றால் , இயேசுவின் அன்பான நண்பர், நீங்கள் முற்றிலும் என்னவாக இருக்கிறீர்கள் !!

என்னுடைய ஜெபம்

கிருபையும்,அன்பும் நிறைந்த பிதாவே , உமது குமாரனின் தியாகப் ஈவின் மூலமாக என்னை இரட்சித்து, உமது பார்வையில் என்னை பரிபூரணமாக்கியதற்காக, உமக்கு நன்றி (கொலோசெயர் 1:22). உமது கிருபையும் , உமது இரட்சிப்பையும் என்னைச் சுற்றிலும் உமது கிருபையை ஏற்றுக்கொள்ளாத ஒருவருக்குத் தெரிவிக்க என்னைப் பயன்படுத்துங்கள். என் மூத்த சகோதரர் (ரோமர் 8:15-17; எபிரேயர் 2:14-17) மற்றும் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து