இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இம்மையிலும் மறுமையிலும் நீதிமான்களையும் துன்மார்க்கர்களையும் தூற்றுக்கூடையை உபயோகித்து பிரித்தெடுப்பேன் என்று பரலோகத்தின் தேவன் வாக்களித்திருக்கிறார் . இயேசு தம்முடைய உவமைகளில் இப்படிப்பட்ட பிரித்தெடுப்பை குறித்து அதே வாக்குறுதியை மீண்டும் கூறியிருக்கிறார் . இருப்பினும், தேவனுடைய மக்களை , நியாயந்தீர்க்கும் போது நீதிமான்களுக்கும் துன்மார்க்கர்களுக்கும் இடையில் - பிரித்தெடுக்கும் வாக்குறுதி நம்மை பயமுறுத்தும் எச்சரிக்கைகளாக அல்ல. மாறாக, அவை வாக்குத்தத்தத்தின் வார்த்தைகளாகும் . ஞானமுள்ளவர்களாக இருந்து கனத்தை பெற்று தேவனுக்காக வாழ்ந்து , மற்றவர்களை அவரிடம் வழிநடத்துபவர்கள் யாவரும் மற்றவர்கள் பார்க்கும்படியாக பிரகாசமாக ஒளிவீசுவார்கள், அவர்கள் யாவரும் பிதாவின் கண்களில் மின்னும் நட்சத்திரங்களைப்போல சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , உமது கிருபையினாலும், இரக்கத்தினாலும் அடியேனை காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி. பிதாவே , சில சமயங்களில் துன்மார்க்கர்கள் செழித்து வளர்வதைக் கண்டும் , அதே சமயம் உம்மீது விசுவாசமுள்ள ஊழியர்கள் தாங்கள் கொண்டுள்ள குணத்திற்காக அவதூறு மற்றும் கேலி செய்யப்படுகிறதைக் கண்டு நான் விரக்தியடைகிறேன். உம்முடைய மாபெரிதான கிருபை மற்றும் நீதியின் தரத்தின் அடிப்படையில் எங்களை நியாயந்தீர்ப்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! உம்மை நேசிப்பவர்களுக்கும், அவர்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக கஷ்டங்களையும் , ஆபத்துக்களையும் மற்றும் ஏளனங்களையும் சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நீர் நீதியை செய்வதற்காக என்றும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் எங்கிருந்தாலும் தயவுக்கூர்ந்து உம் சமூகம் அவர்களுடன் இருப்பதாக , பிரித்தெடுக்கும் நாள் மகிமையுடன் வரும் வரை உறுதியாய் இருக்க அவர்களுக்கு பெலன் தாரும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து