இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் ஜீவனுக்கு பின்னால் உள்ள பெலன் என்ன? அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு நேரடியான வழி, இயேசுவிடம் வந்து எங்களை கண்டுபிடித்து , ஆவிக்குரிய பிரகாரமாக ஆரோக்கியமற்ற அல்லது பரிசுத்தமற்ற காரியங்களை வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்பதாகும் . அவருடைய ஒளியின் சத்தியத்துக்கு நம்மைத் ஒப்புக்கொடுக்கும்போது , நாம் யார் என்பதைப் பற்றிய குறிப்பிடத்தக்க விழிப்புணர்வையும், நம் தேவனுக்கு பயமின்றி வாழ்வதற்கான சுதந்திரத்தையும் நமக்கு அளிக்கிறது, ஏனெனில் அவரே நம் ஒளியாய் இருந்து நம் நோக்கங்களை அறிந்திருக்கிறார். நாம் அவரிடமிருந்து மறைக்க நம்மிடம் ஏதும் இல்லை. தேவன் கண்டறிந்து , அவருடைய ஒளியில் நம்மைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதனால் அந்த ஒளியை மற்றவர்களுடன் நாம் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியானால், தேவனானவர் நமக்குள்ளும் நம் மூலமாயும் பெரிய காரியங்களைச் செய்வார் என்பதை நாம் நம்பிக்கையுடன் அறியலாம், ஏனென்றால் தவறான நோக்கங்கள் அல்லது மறைக்கப்பட்ட காரியங்கள் ஏதும் இல்லை.

என்னுடைய ஜெபம்

தேவனே , உலகத்தின் ஒளியாகிய உமது நேச குமாரன் மூலமாக என் இருதயத்தில் உமது ஒளியைப் பிரகாசிக்க செய்ததற்காக உமக்கு நன்றி. தயவு செய்து எனது பலவீனம், பாவம், மாயமாலம் மற்றும் வஞ்சகம் போன்ற பகுதிகளை எனக்கு மெதுவாக வெளிப்படுத்துங்கள். நான் உமக்கு முன்பாக பரிசுத்தமாகவும் முழுமையாகவும் உமக்காக மாத்திரம் வாழ விரும்புகிறேன். இதை இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மூலமாய் தாழ்மையுடன் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து