இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மனிதர்களாகிய நாம் நமது பிரபஞ்சத்தின் மையமாக நம்மை நினைக்க விரும்புகிறோம். நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான விஷயங்களின் மகத்துவம் அல்லது மேன்மை போன்ற தன்மையை அவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். நம்மில் சிலர் சிறந்த சாகசக்காரர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் என்று கூட கருதுகிறோம். இருப்பினும், எங்களின் மிக முக்கியமான தேடலில், நாங்கள் முந்தி செயல்படவில்லை; தேவனானவர் அதை செய்தார். அவர் நம்மை தன்னலமற்றவராய் நேசித்தார். அவர் நம்மை தனிப்பட்ட முறையில் நேசித்தார். பரலோகத்தின் தேவன் முந்தி நம்மை நேசித்தார். அன்புடன் முந்தி கிருபையினால் நேசித்ததின் பிரதிபலிப்பே நாம் அவர் மீது செலுத்தும் அன்பாகும் . நம் அன்பு என்பது, நமக்குக் கிடைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுதான். அவர் முந்தி நம்மை நேசித்ததினால் நாங்கள் நேசிக்கிறோம்.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே, அப்பா பிதாவே , உம் அன்பின் பரிபூரணத்தை நான் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, ஆனால் நான் கற்பனை செய்ய முடியாத வழிகளில் நீர் அதை எனக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். அன்பான பிதாவே எனவே தயவு செய்து, அடியேன் சோதனையை எதிர்கொள்ளும்போது, உமது கிருபையை சந்தேகிக்கும்போது அல்லது என் தகுதியைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு வழிவகுத்தபோது, உம் அன்பை நினைவில் கொள்ள எனக்கு உதவுங்கள். உம் அன்பு என் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னை முழுமையாக நேசித்ததற்காக நன்றி. என்னை தியாகமாக நேசித்ததற்காக நன்றி. நான் பாவியாக இருந்தபோதும், உம்மிடமிருந்து அந்நியனாக்கப்பட்ட போதும் என்னை நேசித்ததற்காக நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் எங்களை நேசித்ததற்காக நன்றி! இயேசுவின் நாமத்தினாலே நான் உம்மை போற்றி துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.