இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"நான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா!?" வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் மற்றவர்களைப் பற்றி சொல்வது உண்மை: " அவர்களுடைய தைரியத்தினால் நாம் நம்மை விலையேறப் பெற்றவர்களாக வனைந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டக் காரியங்களில் இயேசுவானவரே நமக்கு மிகச் சிறந்த மாதிரி. அவருடைய பன்னிரெண்டு சீஷர்களுடன் அவர் என்ன செய்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடனான அவரது மனத்தாழ்மையும், சாந்தமும் , நீடிய பொறுமையும் எவ்வளவு மாற்றமானதாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவைகளை பார்க்கும் பொழுது நாம் குறைவாக செய்ய துணியலாமா ?

என்னுடைய ஜெபம்

தேவனே , இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் போது மக்களிடம் இருந்ததைப் போல, நான் மற்றவர்களிடம் அன்பாகவும், சாந்தமாகவும், பொறுமையாகவும் இருப்பதற்கு எனக்கு பெலனையும்,பொறுமையையும் தாரும் . என் ஆண்டவரும்,முதற்பேரானவருமாகிய இயேசுவின் நாமத்தில் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து