இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவே நம் ஆண்டவர், நம் கர்த்தராகிய இயேசுவே நம் வாழ்க்கையின் மையமாகும் ! அவரே நம் மையமாக இருப்பதினால் நாம் அவரை சுற்றி இயங்குகிறோம். நம்முடைய மற்ற முன்னுரிமைகளில் இயேசுவைச் சேர்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர் மட்டுமே கர்த்தர் என்பதை பரிசுத்த வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது (யாத்திராகமம் 3:1-6; யோவான் 20:28; தீத்து 2:13). இயேசுவின் சத்தியத்துடன் நம்முடைய வார்த்தைகளை கூட்டுவதற்கு பதிலாக, கீழ்ப்படிதல் மற்றும் தேவபக்தியின் மூலம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய குழந்தையைப் போன்ற விசுவாசத்தில், அதை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் கற்றுக்கொள்ள வேண்டும் (2 பேதுரு 1:3-11, 3:18). இயேசு நம் வாழ்க்கையின் மையக் கவனமாக இருப்பதாலும், அவருடைய கிருபைக்காக நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதால், நம் விசுவாசம் பெலப்படும், நம் நன்றியுணர்வு பெருகும் , மேலும் நாம் பரிசுத்த ஆவியானவரால் ஒவ்வொரு நாளும் அவரைப் போலவே மறுரூபமாவோம் (2 கொரிந்தியர் 3:18; கலாத்தியர் 5:22-23).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , தீமையைக் காணவும் தவிர்க்கவும் எனக்கு மனக்கண்களை தாரும் . என் முன் வைக்கப்படும் ஏமாற்றும் மற்றும் தவறான போதனைகளை பகுத்து அறியும் ஞானத்தை எனக்கு தாரும் . என் ஆண்டவராகிய இயேசுவுக்குள் வேரூன்றி, நன்றியுணர்வு நிரம்பி வழியும் பரிசுத்தமான வாழ்வை வாழ எனக்கு அதிகாரம் கொடுங்கள். பிதாவாகிய தேவனுடைய மகிமையிலும் பரிசுத்த ஆவியின் வல்லமையிலும் இயேசுவை கர்த்தராகக் கனப்படுத்தவும் உயர்த்தவும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து