இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இன்றைய வசனம் "அவர் பூமி அனைத்திற்கும் தேவன் என்று அழைக்கப்படுகிறார்" என்ற சொற்றொடரை நான் கவனிக்கும் போது, வேறு பல பரிசுத்த வேதாகம வசனப் பகுதிகள் என் நினைவுக்கு வந்தன: "தேவன் இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார் ..." (யோவான் 3:16). "உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த தேவன் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர்..." (அப்போஸ்தலர் 17:24). "நான்( தேவன்) பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, ..." (எபேசியர் 3:15). தேவன் என்பவர் இஸ்ரேலின் தேவன் அல்லது குறிப்பிட்ட நாடு, இனம், பாரம்பரியம் அல்லது கலாச்சாரத்திற்கு மாத்திரமல்ல . வானத்தையும் பூமியையும் ஆளுகிற கர்த்தராகிய தேவன் எல்லா தேசங்களுக்கும் தேவன். கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக, எல்லா மக்களும் ஒரு நாள் பரலோகத்தின் தேவனானவர் இயேசுவின் மூலமாய் செய்த காரியங்களுக்காக அவரை அறிந்துக்கொள்ளுவார்கள் என்று முழுநிச்சயமாய் நான் நம்புகிறேன்: [A] இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர்- 2:10, 11) இஸ்ரவேலின் பரிசுத்தரும், இவ்வுலகத்தின் மீட்பருமாகிய தேவன் , எல்லா மக்களையும் தம்மிடம் மறுபடியுமாய் சேர்த்துக்கொள்ள இயேசுவின் மூலம் தம் கிருபையின் கரத்தை நீட்டினார். அப்போஸ்தலனாகிய பவுல் கூறியது போல்: "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. " (அப்போஸ்தலர் 17:26-27).
என்னுடைய ஜெபம்
மாபெரிதான மீட்பர் மற்றும் அனைத்து இராஜ்யங்ககளின் மற்றும் மக்களின் பிதாவே , எங்களை ஆசீர்வதிக்க நீர் செய்த யாவற்றிற்காகவும் எனது நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் சமர்ப்பிக்க நான் தாழ்மையுடன் உம் சமுகத்திற்கு முன்பாக வருகிறேன். நான் உம்மை முழுமையாக அறிந்துகொள்ள முற்படுகையில் எனக்கு வேண்டிய வழிகாட்டுதலும் மேலும் என் வாழ்க்கையில் உம் பிரசன்னத்தை அனுதினமும் அறிந்துகொள்ள உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.