இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுல் ஒரு கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பு ஒரு ஆசிரியராகவும் பரிசேயராகவும் இருந்த ஆத்தும வாழ்க்கையின் போது - குறைந்தபட்சம் அவரது மனதில் - பெரிய காரியங்களை சாதித்திருந்தார். தேவன் மீதும் தேவனின் வார்த்தை மீதும் அவர் கொண்டிருந்த பக்தி வைராக்கியம் தனித்துவம் வாய்ந்தது. கிறிஸ்தவர்களை தூஷனம் செய்பவர்கள் என்று நினைத்து அவர்களை துன்புறுத்தினார். ஆனால் அவர் இயேசுவிடம் வந்தபோது, ​​கிறிஸ்துவை அறிந்ததை விடவும், இயேசுவின் மூலம் தேவனிடமிருந்து பெற்ற கிருபையையும் ஒப்பிடுகையில், அவர் தனது கடந்தகால சாதனைகளை குப்பையாகக் எண்ணினார் . பவுலானவர் இயேசுவுக்குள் இரட்சிப்பைக் கண்டார், பாவம் மற்றும் மரணத்திலிருந்து மாத்திரமல்ல , அதினால் எல்லா மக்களும் மீட்கப்பட்டு இயேசுவுக்குள் நம்பிக்கையைக் கண்டுகொள்ளும் வகையில் கிருபையுள்ள மற்றும் வல்லமையுள்ள வாழ்க்கையை இரட்சிப்க்குள் கண்டார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் சத்தியமுள்ள பிதாவே. நியாயப்படுத்துதல் , பெருமை , ஆணவம், பாவம் மற்றும் விரக்தியிலிருந்து என்னை மீட்டெடுத்த உமது மகா கிருபைக்காக நன்றி. இயேசுவுக்குள் நீர் எனக்கு அளித்த பரிபூரணத்திற்காக உமக்கு நன்றி - இது என் கிரியைகளினால் உண்டானது அல்ல, ஆனால் அவை உம் அன்பான கிருபையால் உண்டாயிற்று . மற்றவர்கள் உம் கிருபை இன்னும் முழுமையாக அறிந்துகொள்ள அடியேனை எடுத்து பயன்படுத்தியருளும் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து