இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரட்சிப்பை இலவசமாக பெற்றோம் ! இரட்சிப்பை இலவசமாக பெற்றோம் ! சர்வ வல்லமையுள்ள தேவனே உமக்கு நன்றி, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்!" ஒரு கிறிஸ்தவராக மாறுவது என்பது பாவம்,மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று நாம் விடுவிக்கப்பட்டதாக அர்த்தம். பரிசுத்த ஆவியின் மூலமாய் தேவன் நம்மில் வாசம் செய்கிறார் . தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதன்படி வாழ ஆவியானவர் நமக்கு உதவுகிறார். பரிசுத்த ஆவியின் வல்லமை மூலம், நியாயப்பிரமாணம் நிறைவேற்ற இயலாததை , கிறிஸ்து இயேசுவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தைக் கொண்டு நாம் செய்து முடிக்கிறோம் : தேவ நீதியின் சிறப்புக்கு ஏற்ப ஜீவிக்க முடியும். நம்மை நெருக்குகிற பாவம், மரணம் மற்றும் நியாயபிரமாண வல்லமையின் பிடியினின்று விடுவிக்கப்பட்டு , நாம் தேவனை போலவே, தேவனோடே நித்தியக்காலமாக ஜீவிக்க அழைக்கப்பட்டுள்ளோம் .

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே, நீர் எனக்கு அளித்த அனைத்து ஈவுகளுக்காகவும் நன்றி. இன்று, நியாயப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்ததற்கும், உமது ஆவியால் எனக்கு அதிகாரம் அளித்ததற்காகவும் நான் உமக்கு விஷேசமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். உமக்காக என் வாழ்க்கையை வாழ நான் உறுதியளிக்கும் போது, ​​இன்றே என்னை உம் ஆவியினால் நிரப்பி, பெலப்படுத்தும். என் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலும், வல்லமையுள்ள அதிகாரத்தினாலும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து