இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் அறியேன் . நான் அறியேன் ! நாம் பயன்படுத்தக் கூடிய கடினமான சொற்றொடர்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேவனைப் பற்றியும் அவருடைய வழிகளைப் பற்றியும் சிந்திக்கும்போது, ​​உண்மையில் நாம் சொல்லக்கூடியது இது மாத்திரமே . தேவனைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்னவென்றால், அவர் அவரை அவருடைய கிருபையை கொண்டு நமக்கு வெளிப்படுத்த சித்தம் கொண்டிருக்கிறார் என்பதே. அவர் இரகசியங்களின் உறைவிடமாக இருக்கிறார் . அவர் உன்னதங்களில் அறியக்கூடியவர்,ஆனால் காணப்படாதவர். ஆயினும்கூட, அவரைப் பற்றி நாம் அறிந்தவை எவை , அவர் இயேசுவின் மூலமாய் நமக்கு வெளிப்படுத்தியவை யாவும் , வல்லமையுள்ளவை மற்றும் அற்புதமானவை மட்டுமல்ல, அன்பும் இரக்கமும் கொண்டவையாகும் .

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, உம் சிருஷ்டிப்புகளையும், கிரியைகளையும் பார்த்து நான் ஆச்சரியமும் பிரமிப்பும் அடைகிறேன். இப்பிரபஞ்சத்தின் பரந்த தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​நாங்கள் வாழும் சிறிய நீல கிரகம் நீர் வைத்த இடத்திலிருந்தே சுழல்கிறது. உம் அற்புதமான மற்றும் விஸ்தாரமான ராஜரீகமும், எல்லாவற்றையும் செய்கிற செயல்களையும் பார்த்து அடியேனை உமக்கு முன்பாக தாழ்த்துகிறேன்.அதே நேரத்தில், அப்பா , பிதாவே நீர் என்கூடவே இருப்பதை நான் பொக்கிஷமாக கருதுகிறேன். நீர் எனக்கு அறிந்த எல்லாவற்றுக்கும் மேலாக நல்லவர், எல்லைகளையும் காலத்தையும் கடந்தவர் , மேலும் எப்போதும் என்னோடிருக்கும் பிதாவாகிய தேவன் . உம்மை எப்பொழுதும் கிட்டிசேர முடியும் ஆனால் கடந்து செல்ல இயலாது , நீர் எப்பொழுதும் இருக்கிறவர் ஆனால் உம்மை ஒரே இடத்தில் வைக்க முடியாது, இப்படி நீர் இருப்பதினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்திலே உமக்கு நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து