இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மல்கியா 4:6-ல், தேவனுடைய வரப்போகிறதான ராஜ்யத்தில் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் . அதாவது நம் பிள்ளைகளை சிட்சையையும் போதனையை சரியான அளவை கொண்டு அவர்களை சீரப்படுத்தி, ஸ்திரப்படுத்தி போதித்து வளர்ப்பதை இன்றே நம் வீடுகளில் இந்த காரியத்தை நடைமுறைப்படுத்துவோம். நம் விசுவாசத்திலே அநேக விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக இருக்க வேண்டாம், ஏன்னென்றால் நம் பிள்ளைகள் அந்த வார்த்தைகளுக்கு செவிக்கொடுக்கவோ கீழ்ப்படிவது கடினமாகவோ,அல்லது முடியாததாகவோ அவர்களுக்கு இருக்கக்கூடாது, பார்க்கப்போனால் நாம் நேசிக்கும் நம் அன்பு பிள்ளைகள் அவர்களளுக்குள் நாம் மகிழ்ச்சியடைகிறோம்! எவ்வாறாயினும், இன்றைய தீமை மற்றும் குழப்பமான உலகில் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து நமது பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் நிச்சயமற்றவர்களாகவும் உணரும் அளவுக்கு அதிகமான சுதந்திரத்தை வழங்க வேண்டாம். நம் இருதயங்களை அவர்கள் பக்கம் திருப்புவோம், பிள்ளைகளின் இருதயங்களை நம்மோடும் சேர்ந்து பரலோகத்திலுள்ள நம் பிதாவோடும் அவருடைய நித்திய வீட்டின் பக்கம் திருப்பமாறு தேவனிடம் ஜெபிப்போம்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , அப்பா பிதாவே , எங்கள் நிலம் ஒரு சாபத்தின் கீழ் உள்ளது, ஏனென்றால் எங்கள் முற்பிதாக்கள் ஆவிக்குரிய ரீதியாகவும் சரீர ரீதியாகவும் தங்கள் பிள்ளைகளை கைவிட்டுள்ளனர். அன்பு, வளர்ப்பு, திருத்தம் போன்ற சவாலான பணிகளைச் சமன் செய்து, எங்கள் குடும்பங்களைச் சுத்தப்படுத்தக்கூடிய பெற்றோரை, குறிப்பாக தாய் தகப்பன்மார்கள் வளர்த்து, உம் அன்பையும் கிருபையையும் எங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ளும்படியாக. எங்கள் பிதாக்களுக்கு உதவும்படி உம்மை மன்றாடுகிறோம். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் .ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து