இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்துவுக்குள்ளான நமது புதிய சகோதர சகோதரிகள் கிறிஸ்துவில் வளர உதவுவதில் சிறப்பாக செயல்பட உறுதி ஏற்போமாக . அப்போஸ்தலர்கள் ஜனங்களை கிறிஸ்துவை நோக்கி வழி நடத்த மாத்திரம் செய்யவில்லை; அவர்களுடைய விசுவாசத்தை ஊக்கப்படுத்தி பலப்படுத்தினார்கள். முதல் நூற்றாண்டு சீஷர்கள், இயேசு தம்மிடமுள்ள விசுவாசத்தை ஜனங்களுக்கு அறிமுகப்படுத்துவதை விட அதிகமாகச் செய்ய தங்களை அழைத்தார் என்பதை உணர்ந்தனர்; எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ண கர்த்தர் அவர்களை அனுப்பினார் (லூக்கா 6:40; கொலோசெயர் 1:28-29). இயேசு, ஜனங்கள் தம்மைப் பற்றிய தீர்மானம் மேற்கொள்ளவதற்காக அழைக்க நம்மை அனுப்பவில்லை, மாறாக, சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பதற்காகவே அனுப்பினார். (மத்தேயு 28:18-20).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமான மற்றும் அன்பான தேவனே , இளம் கிறிஸ்தவனாக என்னை வளர்த்த அந்த விலைமயேறப் பெற்ற மக்களுக்கு நன்றி. எனது திருச் சபை , சரீர குடும்பம் மற்றும் செல்வாக்கு வட்டத்தில் புதிய விசுவாசிகளை ஆசீர்வதிக்க தயவுசெய்து என்னைப் பயன்படுத்தவும். என் மூத்த சகோதரர், இரட்சகர் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து