இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய நாமம் மிகவும் எளிதில் வீணிலே வழங்கப்படும் இந்த காலக்கட்டத்திலே , குறிப்பாக இந்த வசனப் பகுதியில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் எச்சரிக்கையூட்டும் தேவ வார்த்தைகள் அடங்கியுள்ளது: தேவன் மிகவும் உயர்ந்தவர் மற்றும் நம்முடைய எல்லா மேன்மையை காட்டிலும் அவர் எப்போதும் மிகவும் பரிசுத்தமானவர். மகிமையின் ராஜாவின் சமூகத்திலே நாம் நிற்கும்போது நினைத்து கொள்ளவேண்டியது என்னவென்றால், நாம் எத்தனை அதிகமான பாவங்களை நம் வாழ்க்கையில் செய்துகொண்டிருக்கிறோம் , ஆகையால் அவரை கிட்டிச் சேர எவ்வளவேணும் தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தேவனை ருசிப்பார்ப்பதென்பது , அவருடைய ஒப்பற்ற பிரசன்னத்தின் முன் நிற்பது, அவருடைய பரிசுத்தத்தை உணர்ந்து, ஆழ்ந்த நன்றியோடும் , பிரமிப்போடும்,பயபக்தியோடும் தாழ்மையுடனும் இருப்பதேயாகும் . தேவனுடைய நாமம், பரிசுத்தமும், மகத்துவமும் நிறைந்தது, ஆகையால் நம்முடைய தேவைகள் அவருடைய சமூகத்திலே பயபக்தியுடனே நோக்கிப்பார்க்க வழிவகை செய்கிறது , இவை திடீரென்று தோன்றின ஒரு கோட்பாடு அல்ல. நாம் கர்த்தருடைய நாமம், பரிசுத்தமும் , மகத்துவமும் நிறைந்தது என்று ஒருமுறை நோக்கி பார்ப்போமேயானால் , ​​பின்பு அது நம் வாழ்வின் உணர்ச்சியாகவே மாறிவிடும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உமது பரிசுத்தத்தையும், கனத்தையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். உம்முடைய பரிசுத்த நாமத்தையும், உம்மையும்,.கனப்படுத்தாத விதத்திலும் மகிமைப்படுத்தாமலும் பயன்படுத்தியதற்காக அடியேனை மன்னியுங்கள். வேதத்திலே உம்முடைய மகத்துவத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த நீர் பயன்படுத்திய பல நாமங்களை பொக்கிஷமாக வைக்காததற்காக என்னை மன்னியுங்கள். ஏனென்றால் எனது குறைகள் , பெலவீனங்கள் , தோல்விகள் மற்றும் பாவங்கள் ஆகியவைகளை நான் அறிவேன் அதற்காகவும் அடியேனை மன்னித்தருளும் . உம்முடைய பரிசுத்தம் மிகவும் தூய்மையானது, ஆகையால் உமது கிருபை இல்லாவிட்டால், உம்முடைய திருசமூகத்தில் நான் ஜீவிக்க முடியாததாய் இருக்கும். மாறாக, அன்பான பிதாவே , உம்முடைய அன்பான பிள்ளையாக நீர் என்னை வரவேற்கிறீர் ! அதனால் உமது கிருபையினால் , மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும் உம்மை கிட்டிசேர முடிகிறது! அதற்கு கோடானு கோடி நன்றி! நன்றி, இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து