இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனம் என்னை பாதிக்கிறது . அநேக ஜனங்கள் இயேசுவைப் பின்தொடர்வதை விட்டுவிட்டார்கள், ஏனென்றால் அவர் கூறும் காரியங்களை புரிந்துக்கொள்வது கடினமான போதும் அல்லது அவர் சொன்ன விஷயம் அவர்களுக்கு சாத்தியமில்லாதவைகள் என்று நினைத்ததினால் அப்படி செய்தனர். மத விஷயங்களைப் பற்றிய அவர்களின் மனதின் யோசனைகளை அவர் தகர்த்தப்போது அல்லது அவர்களின் நோக்கங்களைப் குறித்து அவர் எதிர்கொண்டபோது, ​​அவர்கள் அவரைப் பின்தொடர்வதை விட்டுவிட்டார்கள். எனது சீஷத்துவத்தில் விஷயங்கள் கடினமாகி, என்ன நடக்கிறது என்பதற்கான எல்லா பதில்களையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நான் என்ன செய்வேன்? நான் நம்பிக்கையுடனும், ஜெபத்துடனும், விசுவாசத்துடனும் இருந்து தேவனுடைய வழியும் சித்தமும் தெளிவடையும் வரை நான் அவரையே பின்பற்றுவேன் !

என்னுடைய ஜெபம்

மிகவும் அற்புதமான தேவனே , உம்முடைய விருப்பத்திலுள்ள அனைத்து சிக்கல்களையும், எங்களுடைய உலகில் நீர் எவ்வாறு செயல்படுகிறீர் என்பதையும் என்னால் எவ்வளவேணும் புரிந்துக் கொள்ள முடியாது என்பதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பிதாவே , நான் குழம்பி நின்ற வேளைகளில் , என்னுடைய ​​குழப்பங்கள் நீங்கும் வரை எனது நம்பிக்கையை நிலைநிறுத்த உதவும் நபர்களை என் வாழ்க்கையில் கொண்டு வாரும் . இன்று, அன்பான பிதாவே , தங்களுடைய நம்பிக்கையுடன் போராடும் மக்களை ஆசீர்வதிக்க என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நம்த்தினாலே , நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து