இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கையில் கெட்ட விஷயங்கள் நடக்கும். கெட்ட விஷயங்களுக்கு சாத்தான் முக்கிய பங்கு வகிக்கிறான் .நமது சொந்த பாவங்களும், அவற்றின் விளைவுகளும் கூட பங்கு வகிக்கின்றன. தேவனுக்கு எதிர்த்து நிற்பதினாலும் , நாம் நேசிக்கும் விஷயத்தில் ஆவிக்குரிய பெலவீனத்தினாலும் வேதனைக்குரிய காரியங்கள் நம் வாழ்க்கையில் நேரிடும். சில வேளைகளில் சோர்விலிருந்து நம்மை எழுப்பவும், நம் வாழ்க்கையில் உள்ள பாவப் பிரச்சனையை சரிசெய்வதற்கும் தேவன் நம்மை சிட்சிக்கிறார். ஆயினும் கூட, இந்த எல்லா காரியங்களிலும், நமக்கு விசேஷித்த வாக்குத்தத்தம் உள்ளது : நாம் தேவனை நேசித்து, நம் வாழ்வில் அவருடைய அழைப்பை கனப்படுத்த விரும்பும்போது, நம் பரலோகத்தின் பிதாவானர் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சகல காரியங்களையும் நமது நன்மைக்காக ஏதுவாக நடத்தி முடிப்பார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, என் வாழ்க்கையில் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் என் நன்மைக்காகச் செய்வீர் என்று நீர் அளித்த வாக்குத்தத்தத்திற்காக உம்மை நான் போற்றுகிறேன். அன்புள்ள பிதாவே, வேதனையான மற்றும் கடினமான சூழ்நிலையில் இந்த வாக்குத்தத்தத்தை உண்மையாக நம்புவதற்கு எனக்கு விசுவாசத்தை தரும்படிக் கேட்கிறேன்.தேவனே , கடினமான சூழ்நிலை தொடரும்போது என் நம்பிக்கையில் நிலைத்திருக்க பொறுமையைத் தாரும் . அன்புள்ள பிதாவே, உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்புகிறேன், நீர் உம்முடைய கிரியையை முடித்தவுடன் என்னைப்பற்றி இறுதியில் என்ன நினைப்பீர் என்று எதிர்பார்க்கிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து