இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"எகிப்திலிருந்து உன்னை இரட்சித்த கர்த்தர் நானே. என்னைத் தவிர வேறு தேவன் உனக்கு இருக்கவேண்டாம்!" பத்துக் கட்டளைகளின் தொடக்கத்தில் சர்வவல்லமையுள்ள தேவனாகிய ஆண்டவர் இந்த மையமான, அடிப்படையான மற்றும் முழுநிறைவான சத்தியத்தை நமக்கு நினைப்பூட்டினார். இதை தவிர கூறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் , நீதியுள்ள, ஒரே மெய்யான ஜீவனுள்ள தேவனே, நான் உம்மை என் இருதயத்தில் மேன்மையான இடத்தில் வைத்திருக்கிறேன். என் வாழ்வில் நான் உம்மை உயர்ந்த இடத்தில் வைக்காத வேலைகளில் அடியேனை மன்னியுங்கள். உம் மீதான எனது விசுவாசத்தை திசை திருப்பும் மற்றும் என்னுடைய அனுதின வாழ்கையில் நீர் உன்னதமான மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனாக இருப்பதிலிருந்து பிரிக்கும் அனைத்து சிறிய விஷயங்களையும் விட்டுவிட உமது பரிசுத்த ஆவியால் எனக்கு அதிகாரம் தாரும் . இயேசுவின் திருநாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து