இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாவ சேற்றிலிருந்து மற்றும் தேவனிடமிருந்து பிரிந்த நிலையில், கிருபையானது நம் இரட்சிப்பை மீட்டெடுக்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஜீவ நதியாய் இருக்கிறது . ஆனால், தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் மன்னிப்பு, கிருபை மற்றும் மீட்பு ஆகிய இவைகளை நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும்போது மாத்திரமே இரட்சிப்பின் சந்தோஷம் உண்டாகுகிறது - கிருபையின் நதியிலிருந்து ஜீவ தண்ணீரை நாம் குடிக்கும்போது. இரட்சிப்பின் சந்தோஷமானது நம் மாறிய வாழ்க்கை முறையிலும், நாம் தேவனோடு நடக்கிறோம் என்ற தொடர்ச்சியான அங்கீகாரத்திலும் அவைகள் நிலைத்திருக்கிறது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் நான் காண்பது போல, உமது இரட்சிப்பினால் உண்டாகும் சந்தோஷத்தின் பெருவெள்ளத்தை நான் பார்க்க ஏங்குகிறேன். உம்முடைய ஆவியானவர் எங்களை சுவிஷேத்தை சொல்லவும், மனம் மாறவும்,சந்தோஷமடையவும் மற்றொரு வாழ்க்கைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்று நான் ஜெபம் செய்கிறேன். சுவிசேஷத்தை கேட்க மனந்திறந்திருக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களைக் அறிந்துக்கொள்ள ஞானமும், அவர்களை என் கண்கள் காணவும் நான் ஜெபிக்கிறேன். உம் தொடர்ச்சியான இரட்சிப்பின் சுவிசேஷத்தின் ஊழியத்தில் நான் உம்முடன் ஒரு உடன் பங்காளியாக இருக்க விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து