இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய வாக்குத்தத்தம் சதாகாலமும் நிலைத்து நிற்கிறது . அவற்றை பல்வேறு வழிகளில் நிறைவேற்றியுள்ளார். அவர் பொல்லாத தேசங்களைத் தண்டித்தார், அவருடைய வாக்குத்தத்ததின்படி இஸ்ரவேலை மீட்டு, எல்லா மக்களுக்கும் இரட்சகராகவும் மீட்பராகவும் இயேசுவை அனுப்பினார். ஒருவேளை நமக்கு மிக முக்கியமாக, இயேசு வரலாற்றின் கடைசி நாட்களில் மறுபடியுமாய் வர காத்து நிற்கிறார், வந்து தேவனுடைய மக்களுக்கு முழு மீட்பையும், எல்லா இடங்களிலும் இன்னுமாய் குறிப்பாக அவருடைய இரண்டாம் வருகைக்கு எதிர்நோக்கும் ஜனங்களுக்கு முழு இரட்சிப்பையும் ( நித்திய வீட்டுக்கு ) கொண்டு வர காத்திருக்கிறார் (2 தீமோத்தேயு 4:8).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, இவ்வுலகில் எத்தனையோ அநீதிகளை நான் காண்கிறேன். அநீதியினால், பொல்லாங்கினால் வீழ்ந்துப்போன உம் சிருஷ்டிப்பை உம்முடைய உண்மையினால் , சத்தியத்தினால் மற்றும் நீதியினால் வெற்றிபெற அடியேன் ஏங்குகிறேன். இயேசுவின் வருகைக்காக நான் காத்திருக்கும்போது , ​​இயேசுவை அறியாத பலருக்கும் உமது விருப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்களுக்காகவும் என் இருதயம் உடைகிறது. தயவு செய்து, அன்புள்ள ஆண்டவரே, உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யபடட்டும் , உமது சித்தத்தின் வெற்றி என்னிடமிருந்து தொடங்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து