இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தைப் நாம் வாசிக்குமபோது, ​​சீஷர்கள் "இயேசுவின் நாமத்தினாலே " துன்பப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதைக் காண்கிறோம். இயேசு ஏற்கனவே அந்த வகையான சோதனையை வெற்றிகரமாக கடந்துவிட்டதால், அவரோடே கூட பாடுகளை சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம். நாம் "அக்கினியினால் சோதிக்கப்படும்" போது, ​​நமது உறுதிப்பாட்டின் உண்மை பெரும்பாலும் சந்தேகத்திற்குரியவர்களுக்கு சிறப்பாகக் காட்டப்படுகிறது. ஆகவே, பாடுபடும்போது நம் குணத்தை வைத்து மகிழ்ச்சியடைவோம், ஏனென்றால் தேவனுடைய பிள்ளைகள் தங்கள் ஜீவனையே கொடுத்து உண்மையாக இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதை இயேசுவினில் பார்த்தோம்.

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய குமாரனுக்கு நீர் எவ்வளவு விலையேறப்பெற்ற நாமத்தை கொடுத்தீர். அவர் மெய்யான ஆண்டவரும் கர்த்தரும் என்பதை ஒவ்வொரு இருதயமும் அறியும் வரை, அது பூமி முழுவதிலும், எல்லா வானங்களிலும் உயர்ந்ததாக இருக்கட்டும். இயேசுவின் நாமத்திலும், அவருடைய மகிமைக்காகவும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து